நாளுக்கு நாள் உயரும் எரிவாயு சிலிண்டரின் விலை

சென்னை: இந்தியாவில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலைகளை சர்வதேச அளவிலான கச்சா எண்ணெய் நிலவரத்தை பொறுத்து எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து கொண்டு வருகின்றன. தற்போது இதன் விலை விண்ணை முட்டும் அளவிற்கு அதிகரித்ததுள்ளது.

அதிலும் குறிப்பாக சிலிண்டர் விலை உயர்வு மக்களிடையே மிக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்றைக்கு பலரும் மண்ணெய் அடுப்பில் இருந்து சிலிண்டருக்கு மாறி விட்டனர்.

இந்நேரத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வது நடுத்தர மக்களுக்கு பெரும் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.இதையடுத்து தற்போது வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை இம்மாதம் ரூ . 8 விலை ஏற்றப்பட்டு ரூ.1945க்கு விற்பனையாகி வருகிறது.

மேலும் கிட்டத்தட்ட 2 மாதங்களுக்கு பிறகு இதன் விலை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.1,180.50 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆகஸ்ட் மாதம் தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் சிலிண்டர் விலையில் மாற்றம் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.