ரஷ்யாவிற்கு உளவுத்தகவலை அனுப்பிய ஜெர்மன் பிரஜை சிக்கினார்

ஜெர்மன்: உளவு தகவல் அனுப்பியவர் கைது... ரஷ்யாவிற்கு உளவுத் தகவல்களை அனுப்பிய குற்றச்சாட்டின் அடிப்படையில் ஜெர்மன் பிரஜை ஒருவர் முனிச் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக அரசு வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஆர்தர் ஈ என அடையாளம் காணப்பட்டுள்ள குறித்த நபர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அமெரிக்காவில் இருந்து ஜெர்மனிக்கு வந்தபோது கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜெர்மன் உளவுத்துறை ஊழியர் அல்லாத ஆர்தர் ஈ கார்டன் எல் நிறுவனத்திடம் இருந்து பெற்ற தகவல்களை ரஷ்ய உளவுத்துறைக்கு அனுப்பியதாக நம்பப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.