உக்ரைனுக்கு ஆயுதம் வழங்க முடிவெடுத்த ஜெர்மனி... கடுப்பில் ரஷ்யா

ரஷ்யா: ரஷ்யா - உக்ரைன் போரில் ஜெர்மனியின் முக்கியத்துவம் அதிகரித்து வருவதுபோல் தெரிகிறது. போர் துவங்கிய நேரத்தில், உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்க தயக்கம் காட்டியது ஜெர்மனி.

ஆனால், ஜெர்மனி ஆயுதங்கள் வழங்க முடிவு செய்ததுமே, ஜெர்மன் சேன்ஸலர் ஓலாஃப் ஷோல்ஸ் எதிர்பார்த்தது போலவே ரஷ்யாவின் கோபத்தை சம்பாதித்துக்கொண்டுள்ளது.

ஜெர்மனி உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்க முடிவு செய்துள்ள விஷயம் ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கு எரிச்சலையூட்டியுள்ள நிலையில், நம்பமுடியவில்லை, ஆனால் உண்மை, மீண்டும் நாம் ஜெர்மனி Leopard tanks என்னும் போர் வாகனங்களின் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளோம் என்று கூறியுள்ளார் அவர்.

ஆக, ரஷ்யா ஜெர்மனியைக் கண்டு அஞ்சுவதை புடின் தன் வாயாலேயே ஒப்புக்கொண்டுள்ளாரா என்பது புரியவில்லை.