GOAT என்றால் ஆடு இல்லை அதை மாற்றி பெருமையாகக் கூறிய ஆசரியர்..

தமிழ்நாடு: GOAT என்றால் ஆடு இல்லை மாணவர்கள் கிண்டல் என நினைத்த ஆசரியர். பெருமிதம் கொள்ள வைத்த மாணவர்கள். பெரும்பாலான பள்ளிக் குழந்தைக்களுக்கு கணித பாடம் என்றால் கஷ்டம் அதை எடுக்கும் ஆசிரியர் மீதும் அச்சம் இருக்கும். இந்நிலையில் சமீபத்தில் எட்டாம் படிக்கும் மாணவர்களுக்குக் கணிதம் கற்பிக்கும் ஆசரியர் ஒருவர் தன் மாணவர்களை தன்னை GOAT என்று அழைப்பதால் கவலை கொண்டு உள்ளார்.
மேலும், ரெட்டிட் தளத்தில் தன் மாணவர்கள் ஏன் தன்னை GOAT என்று கிண்டல் செய்கிறார்கள் என்பதைக் கேள்வியாக எழுப்ப, அதில் வந்த பதில்களைப் பார்த்து தன் மாணவர்கள் தன்னைக் கிண்டல் செய்யவில்லை என்பதும்,தன்னைப் புகழ்ந்துயுள்ளனர் என்பதும் தெரிய வந்துள்ளது.

puzzlebrain20 என்ற பெயரில் ரெட்டிட் தளப் பயனாளர் ஒருவர் குழு ஒன்றில்,என் மாணவர்கள் ஏன் என்னை goat என்று அழைத்தார்கள் என்று விளக்கத்தை கொடுத்துயுள்ளார்.
அவர் கூறியது GREATEST OF ALL TIME என்பதை சுருக்கி GOAT என்று அழைத்தார்கள் என்று பெருமிதம் கொண்டார்.