புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ரேஷன் கார்டு வழங்க விண்ணப்பங்களை பெறலாம் என அரசு அறிவிப்பு

சென்னை: ‘இவர்களுக்கு’ புதிய ரேஷன் கார்டு ... தமிழகத்தில் அசாம், பீகார், ஒடிசா உள்ளிட்ட வட மாநிலங்களிலிருந்து 12லட்சம் பேர் வேலைக்காக வந்து இருக்கின்றனர். இதையடுத்து அவர்களுக்கு ரேஷன் கார்டு வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் இது குறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் கூறுகையில், தொழிலாளர் நலன் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுக்காகவும், தொழிலாளர் சேவையை முறைப்படுத்துவதற்காகவும், மத்திய தொழிலாளர் துறை உத்தரவுப் படி, தொழிலாளர் விவரம், இ – ஷ்ரம் இணையதளத்தில் பதிவு செய்யப்படுகிறது.


மேலும் தொழிலாளர் பெயர், தொழில், முகவரி, கல்வித்தகுதி, திறன் போன்ற விவரங்கள் ஆதாருடன் இணைக்கப்படுகிறது. ‘இ-ஷ்ரம்’ல் பதிவு செய்த, தகுதியான புலம்பெயர் தொழிலாளருக்கு ரேஷன் கார்டு வழங்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. இந்த ரேஷன் கார்டு பெற நிரந்தரமாக குடியேறியவர்கள் மற்றும் தற்காலிகமாக குடிபெயர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

குடும்பம் சொந்த மாநிலத்திலிருந்து, தொழிலாளர் மட்டும் தமிழகத்தில் இருந்தாலும், விண்ணப்பிக்க முடியும். இந்த விண்ணப்பம் சம்பந்தப்பட்ட மாநில அரசுக்கு அனுப்பி சரிபார்க்கப்பட்டு பரிசீலிக்கப்படும். இந்த விண்ணப்பத்தை குடிமைப்பொருள் வழங்கல் பிரிவினர், வெளிமாநில மக்களின் விண்ணப்பங்களை ஏற்கலாம் என்று அரசு உத்தரவிட்டு உள்ளது.