தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு தொழிற்கல்வியில் சேர 7.5% இடஒதுக்கீடு தமிழ்நாடு அரசு அறிவிப்பு

தமிழகம்: தமிழக அரசு பள்ளிகளில் 6 முதல் 12 வகுப்பு வரை பயின்ற மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு இளநிலை தொழிற்கல்வி படிப்புகளில் சேர முன்னுரிமை வழங்கப்படுகிறது. அதாவது, அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீட்டை வழங்கவுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ள மாணவர்களின் பெயர் பட்டியலை தமிழக பள்ளிக்கல்வித்துறை தற்போது வெளியிட்டுள்ளது.

இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ள மாணவர்களின் பெயர் பட்டியலை https://studentrepo.tnschools.gov.in/ என்கிற இணையதள முகவரி பக்கத்திற்கு சென்று பெயர் இருக்கிறதா என்பதை அறிந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மாணவர்களின் பெயர் விடுபட்டிருந்தால் மாணவர்கள் தங்கள் பெயர்களை சேர்ப்பதற்கு மேல்முறையீடு செய்யலாம் எனவும், மேல்முறையீடு செய்கையில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைக்கு 12 வகுப்பு பயிலும் 2.7 லட்சம் மாணவர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலமாக மாணவர்கள் பள்ளிக் கல்வியிலிருந்து உயர் கல்விக்கு எந்தச் சிரமமுமின்றி பதிவு செய்யலாம்.

மாணவர்கள் 6 ஆம் வகுப்பு முதல் முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் பயின்றிருக்கிறார் என்றால் கண்டிப்பாக அந்த மாணவர்களின் பெயர் பட்டியலில் சேர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பட்டியலில் பெயர் விட்டு போன மாணவர்கள் விவரங்களை சமர்பிக்கும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.