28 மெட்ரோ ரயில் தொடர்களை கொள்முதல் செய்ய அரசு முடிவு

சென்னை: மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ.2820.90 கோடி மதிப்பீட்டில் 6 பெட்டிகள் கொண்ட 28 ரயில் தொடர்களை கொள்முதல் செய்ய முடிவு ...போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக சென்னையில் 2015 -ம் ஆண்டு மெட்ரோ ரயில் சேவை கொண்டுவரப்பட்டது. சென்னையில் கூட்ட நெரிசலை குறைக்கவும், குறைவான நேரத்தில் பயணிக்கவும் ஏதுவாக மெட்ரோ ரயில் அமைந்து உள்ளது.

சென்னையில் மெட்ரோ ரயில் விமான நிலையம் முதல் வண்ணாரப்பேட்டை வரையிலும், சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரையிலும் இயக்கப்பட்டு வருகிறது. சென்னை மெட்ரோ ரயிலை தற்போதைய நிலையில் நாளொன்றுக்கு 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயன்படுத்தும் நிலையில், இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது.

இதையடுத்து விம்கோ நகர் முதல் விமான நிலையம் மெட்ரோ வரை 6 நிமிட இடைவெளியிலும், புரட்சித்தலைவர் டாக்டர். எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ முதல் பரங்கி மலை மெட்ரோ வரை 6 நிமிட இடைவெளியிலும் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படுகிறது. விம்கோ நகர் முதல் சென்னை விமான நிலையம் வரையிலும், சென்னை சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரையிலும் என இரண்டு வழிதடங்களில் சுமார் 55 கிலோமீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் தினசரிலட்சக்கணக்கான பயணிகள் பயணித்து கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழகத்தில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ.2820.90 கோடி மதிப்பீட்டில் 6 பெட்டிகள் கொண்ட 28 ரயில் தொடர்களை கொள்முதல் செய்ய முடிவு செய்துள்ளது. 2028-ம் ஆண்டின் உத்தேச பயணிகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில் நடவடிக்கை எடுத்துள்ளது. பன்னாட்டு நிதி நிறுவனங்களிடமிருந்து நிதி பெற்று கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதுதொடர்பான மெட்ரோ ரயில் நிறுவனத்தின் கருத்துருவிற்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்து உள்ளது.