என்.எல்.சி-யின் நில எடுப்பு நடவடிக்கைக்கு அரசு துணை நிற்கிறது: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

சென்னை: அரசு மீது குற்றச்சாட்டு... என்.எல்.சி-யின் நில எடுப்பு நடவடிக்கைக்கு தற்போதைய அரசு துணை நிற்பதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முந்தைய ஆட்சியில் விவசாயிகளின் நியாயமான கோரிக்கையினை என்.எல்.சி. ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் அதிமுக உறுதியாக இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் தற்போது விவசாயிகளின் மறுவாழ்வு மற்றும் மறுசீரமைப்பு திட்டங்களை நிறைவேற்றாமல், விளை நிலங்களில் உள்ள நெற்பயிர்களை அழித்து என்.எல்.சி. நிறுவனம் வாய்க்கால் வெட்டுவதாகவும் இபிஎஸ் கூறியுள்ளார்.

விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி விட்டு நில எடுப்பை மேற்கொள்ள வேண்டும் என்றும் இபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.