ஒரு மணி நேரத்தில் 249 கப் தேநீர் தயாரித்து கின்னஸ் சாதனை

தென் ஆப்பிரிக்கா: தேநீர் தயாரிப்பில் சாதனை... தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த இங்கார் என்பவர் ஒரு மணி நேரத்தில் 249 கப் தேநீர் தயாரித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த வுப்பர்தாலின் இங்கார் வாலண்டின் என்பவர் ஒரு மணி நேரத்தில் அதிக கப் தேநீர் தயாரித்து கின்னஸ் சாதனை படைக்க நினைத்தார். இதையடுத்து அவர் தனது உலக சாதனை முயற்சிக்காக தென்ஆப்பிரிக்காவின் பிரபலமான ரூயிபோஸ் தேநீர் தயாரிக்கத் முடிவெடுத்தார்.

இது தென்னாப்பிரிக்காவின் ஸ்பாலதஸ் லீனரிஸ் புதரின் இலைகளில் இருந்து தயாரிக்கப்படும் சிவப்பு மூலிகை தேநீர். இந்த தேநீரின் அசல் சுவை, வெண்ணிலா மற்றும் ஸ்ட்ராபெரி ஆகிய மூன்று வகைகளயும் அவர் பயன்படுத்தினார்.