தூத்துக்குடி கடல் பகுதியில் பிடிபட்ட பாகிஸ்தான் படகில் துப்பாக்கிகள்

பிடிபட்ட பாகிஸ்தான் படகில் துப்பாக்கிகள்... தூத்துக்குடி கடல் பகுதியில் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த படகு பிடிபட்டுள்ளதும், படகிற்கு உள்ளே துப்பாக்கிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் படகு கராச்சி துறைமுகத்தைச் சேர்ந்தது என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கராச்சியில் இருந்து அரபிக்கடல் வழியாக இலங்கை சென்று பிறகு இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்றபோது, நமது கடல் பகுதியில் ரோந்து பணியில் இருந்த, இந்திய கடலோர காவல் படை அந்தப் படகை சந்தேகத்தின்பேரில் மடக்கி நிறுத்தியுள்ளது.

படகுக்கு உள்ளே சோதனை போட்டபோது 100 கிலோ ஹெராயின் போதை மருந்து மற்றும் 10 நாட்டு துப்பாக்கிகள் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த போதை மருந்து பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு கடத்திச் செல்லப்பட்டதா, அல்லது இந்தியாவுக்கு கொண்டுவர முயற்சி செய்யப்பட்டதா என்பது பற்றி விசாரித்து வருகிறார்கள்.

இந்த படகு பாகிஸ்தானை சேர்ந்தது என்றும், சிலர் இந்த படகு இலங்கையை சேர்ந்தது என்றும், உள்ளே உள்ள சரக்குகள் பாகிஸ்தானை சேர்ந்தது என்றும் தெரிவிக்கிறார்கள். இன்னும் அதிகாரபூர்வமான தகவல் வெளியாக வேண்டியுள்ளது. இருப்பினும் இந்திய கடல் பகுதியில் நடைபெற்ற இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.