இஸ்ரேலின் நடத்திய ஏவுகணை தாக்குதலில் ஹமாஸ் தளபதிகள் பலி

இஸ்ரேல்: இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் தளபதிகள் பலியாகி உள்ளனர் என்று தெரிய வந்துள்ளது.

இஸ்ரேல் – பாலஸ்தீனிய ஆதரவு அமைப்பான ஹமாஸ் இடையே போர் வெடித்துள்ளது. இஸ்ரேலுக்குள் ஹமாஸ் புகுந்து தாக்கியதை தொடர்ந்து தற்போது இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பு பதுங்கியுள்ள காசா பகுதிகளில் தாக்குதல் நடத்தி வருகிறது.

முன்னதாக விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தி வந்த நிலையில் தற்போது தரை வழி தாக்குதலும் தொடங்கியுள்ளது. தற்போது நடந்து வரும் ஏவுகணை தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் 6 கமாண்டர்கள் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. மேலும் ஹமாஸின் முக்கியமான 2 படைப்பிரிவின் தளபதிகளும் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

டார்ஜ் தபா படைப்பிரிவின் கமாண்டர் ரபத் அப்பாஸ் மற்றும் போர் நிர்வாக உதவி தளபதி தரேக் மரூப் ஆகியோர் விமான வழி தாக்குதலில் பலியானதாக கூறப்பட்டுள்ளது. இதனால் ஹமாஸ் படையினர் பின்னடைவை சந்திக்கலாம் என கூறப்படுகிறது.