மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் 1 மணி நேரமாக கனமழை பெய்தது

மதுரை: மதுரையில் கடந்த சில தினங்களாகவே அவ்வப்போது மாலை நேரங்களில் தொடர்ந்து மழை பெய்துகொண்டு வருகிறது. இதனால் மதுரை மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தனர். இந்நிலையில், இன்று காலையில் மதுரையில் வெயில் அளவு அதிகமாகவே பதிவானது.

அதை அடுத்து இந்நிலையில் இன்று மாலையில் கருமேகங்கள் ஒன்று திரண்டு மழைக்கான அறிகுறியை வெளிப்படுத்தியது. இதைத்தொடர்ந்து மாலை 6.30 மணி அளவில் திடீரென மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை 1 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது.

இதனால் தாழ்வான சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதுபோல் நகரின் முக்கிய வீதிகளிலும் மழைநீர் தேங்கி நின்ற காட்சிகளையும் காணமுடிந்தது.

மேலும் மாலை நேரம் என்பதால் அலுவலகங்களுக்கு சென்று விட்டு வீட்டிற்கு சென்றவர்கள், வேலை முடித்து விட்டு வீட்டிற்கு சென்றவர்கள் என பரபரப்பாக மக்கள் சென்று கொண்டிருந்த வேளையில் மழை பெய்ததால் நகரின் முக்கிய இடங்களான பெரியார் பஸ் நிலையம், காளவாசல், கோரிப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.