இன்று முதல் வரும் 6ஆம் தேதி வரையில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு


சென்னை: தமிழகத்திற்கு இன்று முதல் வருகிற 6-ம் தேதி வரையில் பல்வேறு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மையம் தெரிவிப்பு .. மேற்கு வங்க கடல் பகுதியில் மேல் வளிமண்டல சுழற்சி காரணமாக ஜூலை 3 முதல் (இன்று) முதல் ஜூலை 6 ஆம் தேதி வரையில் நீலகிரி, கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களிலும்

இதனை அடுத்து திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நேற்று புதுச்சேரி, நீலகிரியில் தலா 40 மில்லி மீட்டர் மழை அளவும் நீலகிரி அவலாஞ்சி, விருதுநகர், விழுப்புரம், நீலகிரி – கூடலூர் பஜார், சிவகங்கை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் குறிப்பிட்ட பகுதிகளில் தலா 20 மில்லி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.

அதேபோன்று, மதுரை விமான நிலையம், ஈரோடு, வேலூர் ஆகிய இடங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி பதிவாகியுள்ளது. என்றும் , தென் தமிழக கடலோரப் பகுதிகளில் இன்று சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் வானிலை மையம் குறிப்பிட்டு உள்ளது.