தமிழகத்தில் இன்று முதல் இந்த தேதி வரை நகரின் பல்வேறு பகுதிகளில் கனமழை பொழிய வாய்ப்பு

சென்னை: தமிழக கடலோர பகுதி மற்றும் தென்மேற்கு வங்க கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலெடுத்து சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கடந்த 2 வாரத்திற்கும் மேலாகவே கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் வருகிற அக்டோபர் 6 ஆம் தேதி வரையிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

இதனால், நகரின் பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னையை பொறுத்த வரையிலும் அடுத்த 24 மணி நேரத்திற்கு நகரின் பல்வேறு பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டது.


மேலும், தமிழகத்தில் தொடர்ந்து டெங்கு காய்ச்சல் உயர்ந்து வரும் நிலையில் தெருக்களில் நீர் தேங்காத வண்ணம் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி சுகாதாரத்துறை எச்சரித்து இருக்கிறது.

இதனையடுத்து, இலங்கை கடலோர பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல் பகுதி, அந்தமான் கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு மத்திய கடல் பகுதிகளில் சுறாவளி காற்று மணிக்கு 40 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்வதை தவிர்க்கும் படி எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.