16 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு

ஒடிசா : ஒடிசா மாநிலத்தில் உள்ள 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், 16 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதை அடுத்து இந்த 16 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோன்று நாளை 10 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே காற்றழுத்த தாழ்வு பகுதி தெற்கு சத்தீஸ்கரில் மையம் கொண்டுள்ளது. தற்போது, மேற்கு-வடமேற்கு திசையில் பவானிபட்னாவில் இருந்து 190 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. இது படிப்படியாக மேற்கு நோக்கி நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் வலுவிழக்கும்.

மேலும் கனமழை முதல் மிக அதிக மழைப்பொழிவு இந்த மாவட்டங்களின் பாதிக்கப்படக்கூடிய மலைப்பாங்கான பகுதிகளில் நிலச்சரிவு அல்லது மண்சரிவுகளைத் தூண்டக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அலை தாக்கம் காரணமாக கடல் கொந்தளிப்பாக உள்ளது. எனவே நாளை வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.