மக்களுக்கு நீதி கிடைத்திருந்தால் ஆதரவு தெரிவித்திருப்பேன்... வடிவேல் சுரேஷ் அதிருப்தி

கொழும்பு: பொருளாதார நெருக்கடிகளில் சிக்கி மக்களின் பெரும் போராட்டங்களுக்கு பின்னர் இலங்கையில் புதிய அரசு அமைந்தது. தொடர்ந்து 2023ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட்டது.


தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பளம் தொடர்பாக வரவு செலவுத் திட்டத்தில் ஒரு வார்த்தை கூட இல்லை என்று வடிவேல் சுரேஷ் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

தமது மக்களுக்கு நீதி கிடைத்திருந்தால் வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக இரு கைகளையும் உயர்த்தியிருப்பேன் என்றும் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஆகவே எதிர்காலத்தில் தோட்டத் தொழிலார்களுக்கு நீதி வழங்குவது தொடர்பாக பரிசீலிக்குமாறு வடிவேல் சுரேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார். வரவு செலவு திட்டம் குறித்து பலரும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். மேலும் பொருளாதார நெருக்கடியும் அதிகரித்து வருகிறது என்றும் கூறப்படுகிறது.