பொருளாதார தடை விதியுங்கள்... அமெரிக்க எம்.பி.,க்கள் அதிபர் ஜோ பைடனிடம் வலியுறுத்தல்

வாஷிங்டன்: அமெரிக்க எம்.பிக்கள் கோரிக்கை... பாகிஸ்தான் மீது பொருளாதார தடை விதிக்கும்படி கோரி, அமெரிக்க எம்பிக்கள் 11 பேர், அதிபர் ஜோ பைடனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளிங்கெனிடமும் அளித்துள்ள கடிதத்தில் பாகிஸ்தானில் மனித உரிமைகள் மற்றும் சர்வதேச சட்டங்களின் மீறல்கள் இருப்பதை அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

பாகிஸ்தானில் தேர்தல்கள் நியாயமான முறையில் நடைபெற்று சட்டம் மற்றும் ஜனநாயகம் பராமரிக்கப்படும் வரை அந்நாட்டுக்கு நிதியுதவி அளிப்பதை நிறுத்தி வைக்கும்படி அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே பல பிரச்னைகள் மற்றும் பொருளாதார நெருக்கடி ஆகியவற்றில் சிக்கி தவிக்கும் பாகிஸ்தானுக்கு இந்த தகவல் மேலும் அதிர்ச்சியைதான் ஏற்படுத்தி உள்ளது என்று அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.