இலங்கை தேர்தலில் முன்னிலை வகிக்கும் பிரதமர் மஹிந்தவிற்கு இந்திய பிரதமர் மோடி வாழ்த்து

பிரதமர் மஹிந்தவிற்கு இந்திய பிரதமர் மோடி வாழ்த்து... இதுவரை வெளியான பொதுத்தேர்தல் முடிவுகளின்படி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னிலை வகிக்கும் நிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு பாரத பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தொலைபேசி அழைப்பின் ஊடாக வாழ்த்துக்களை தெரிவித்ததாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது டுவிட்டரில் பதிவில் கருத்து பதிவிட்டுள்ளார். மேலும் இலங்கை மக்களின் வலுவான ஆதரவோடு, இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்த இந்தியாவுடன் நெருக்கமாக பணியாற்ற தான் தயாராக இருப்பதாகவும் மஹிந்த ராஜபக்ஷ அதில் குறிப்பிட்டுள்ளார்.

கண்டி மாவட்டம், கம்பொல தொகுதி தேர்தல் முடிவுகள்படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 41,759 வாக்குகளைப் பெற்றுள்ளது. அதேபோல், ஐக்கிய மக்கள் சக்தி 26,331 வாக்குகளைப் பெற்றுள்ளது. சுயேட்சைக் குழு ஒன்று 2,101 வாக்குகளைப் பெற்றுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி 1,937 வாக்குகளைப் பெற்றுள்ளது.

களுத்துரை மாவட்டம் பேருவளை தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள்படி, பொதுஜன பெரமுன கட்சி 47,098 வாக்குகளைப் பெற்றுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி 34,029வாக்குகளைப் பெற்றுள்ளது. தேசிய மக்கள் சக்தி 3,322 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி 1,236 வாக்குகளைப் பெற்றுள்ளது.

பொலனறுவை தொகுதிக்கான தேர்தல் முடிவுகள்படி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி 79724 வாக்குகளைப் பெற்றுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி 22989 வாக்குகளைப் பெற்றுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி 2826 வாக்குகளைப் பெற்றுள்ளது. தேசிய மக்கள் சக்தி 2414 வாக்குகளைப் பெற்றுள்ளது.