மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4-வது நாளாக வினாடிக்கு 26,000 கன அடியாக நீடிப்பு

சேலம்: ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் அப்படியே மேட்டூர் அணைக்கு வருகிறது. இதையடுத்து தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் ஒகேனக்கல், மேட்டூர் இடையிலான காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் சாரல் மழை பெய்கிறது. இந்த மழை நீரும் மேட்டூர் அணைக்கு வருகிறது.

காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து உயர்ந்து கொண்டே வருகிறது. இதையடுத்து இந்த நிலையில், இன்று காலை நீர்வரத்து 4-வது நாளாக வினாடிக்கு 26,000 கன அடியாக நீடிக்கிறது.

எனவே அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 21,500 கன அடி வீதம் நீர்மின் நிலையங்கள் வழியாகவும் வெள்ள நீர் வினாடிக்கு 4,500 கன அடி வீதம் உபரிநீர் போக்கி வழியாகவும் திறக்கப்பட்டு வருகிறது.

மேலும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 750 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இன்று காலை 24-வது நாளாக மேட்டூர் அணை நீர்மட்டம் தொடர்ந்து 120 அடியாக நீடித்து வருகிறது. அணையின் நீர் இருப்பு 93.47 டி.எம்.சியாக உள்ளது.