கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை குறித்த தகவல்

புதுடில்லி: 67.91 கோடியாக உயர்வு... உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 67.91 கோடியாக அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 6,794,250 பேர் மரணமடைந்துள்ளனர்.

இதனை அடுத்து உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 651,906,345 பேர் மீண்டனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது உலகம் முழுவதும் 20,422,731 ஆக்டிவ் கேஸ்கள் உள்ளன

இந்த நிலையில் நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2000 ஆக பதிவாகியுள்ளது. இந்தியாவில் இதுவரை பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,30,763 பேர் ஆக உள்ளது. இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,41,52,687 ஆக பதிவாகியுள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 95 என பதிவாகியுள்ளது . நாடு முழுவதும் இதுவரை 220,63,60,778 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 7,3947 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.