நடிகர் ரஜினிகாந்தின் கட்சி அறிமுக விழா நடைபெறும் இடம் குறித்த தகவல்

நடிகர் ரஜினிகாந்த் கட்சியின் அறிமுக விழா நடைபெறும் இடம் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஜனவரி 31ம் தேதி கட்சியின் அறிவிப்பை வெளியிடுவதாக ரஜினிகாந்த் தெரிவித்திருந்த நிலையில் தற்போது அதன் தொடக்கவிழா நடைபெறும் இடம் குறித்து தகவல் வெளியாகியுள்ளன.

கடந்த டிசம்பர் 3ம் தேதி ஜனவரியில் கட்சித் துவக்கம்,டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு என நடிகர் ரஜினிகாந்த் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

மேலும், ஜனவரியில் கட்சி துவங்க இருப்பதால், அர்ஜுனமூர்த்தியை தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் மற்றும் தமிழருவி மணியனை மேற்பார்வையாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் ரஜினிகாந்த் அவர்களின் கட்சியின் அறிமுக விழா மதுரையில் நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மதுரையில் தான் விஜயகாந்த் அவர்கள் தனது கட்சியின் அறிமுக விழாவை கடந்த 2005ம் ஆண்டு தொடங்கினர். மேலும் கமல் ஹாசன் அவர்களும் தனது கட்சியின் பெயரை 2018ம் ஆண்டு மதுரையில் தான் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.