மாவட்ட வாரியாக கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவல்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. நேற்று மட்டும் புதிதாக 2,516 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 64 ஆயிரத்து 603 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 28 ஆயிரத்து 428 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து 35 ஆயிரத்து 339 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும், கொரோனா தாக்குதலுக்கு தமிழகத்தில் இதுவரை 833 பேர் உயிரிழந்துள்ளனர்.

விமானம் மூலம் வெளிநாடு மற்றும் உள்நாடுகளில் இருந்து வந்த 430 பேர் விமானநிலைய கண்காணிப்பில் உள்ளனர். ரயில் மூலம் பிற மாநிலங்களில் இருந்து வந்தவர்களில் 401 பேர் ரெயில் நிலைய கண்காணிப்பில் உள்ளனர்.

மாவட்ட வாரியாக கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை:-
அரியலூர் - 432
செங்கல்பட்டு - 4,030
சென்னை - 44,205
கோவை - 292
கடலூர் - 850
தர்மபுரி - 43
திண்டுக்கல் - 357
ஈரோடு - 87
கள்ளக்குறிச்சி - 437
காஞ்சிபுரம் - 1,286
கன்னியாகுமரி - 180
கரூர் - 120
கிருஷ்ணகிரி - 67
மதுரை - 988
நாகை - 165
நாமக்கல் - 89
நீலகிரி - 48
பெரம்பலூர் - 163
புதுக்கோட்டை - 88
ராமநாதபுரம் - 339
ராணிப்பேட்டை - 551
சேலம் - 347
சிவகங்கை - 103
தென்காசி - 272
தஞ்சாவூர் - 319
தேனி - 284
திருப்பத்தூர் - 75
திருவள்ளூர் - 2,826
திருவண்ணாமலை - 1,313
திருவாரூர் - 241
தூத்துக்குடி - 678
திருநெல்வேலி - 648
திருப்பூர் - 120
திருச்சி - 352
வேலூர் - 526
விழுப்புரம் - 617
விருதுநகர் - 234