WhatsApp செயலி பயனர்கள் தங்கள் பாதுகாப்பைக் கட்டுப்படுத்த புதுமையான அம்சம்

இந்தியா: WhatsApp செயலியில் தனிநபரின் பாதுகாப்புக்காக பல அம்சங்களை WhatsApp நிறுவனம் அறிமுகப்படுத்தி கொண்டு வருகிறது. அந்த வகையில் இது தொடர்பாக இந்த நிறுவனத்தின் இந்திய இயக்குனர் தெரிவித்துள்ளதாவது,

Two-step verification மூலமாக உங்களின் மொபைல் போன் தொலைந்து விட்டாலும், திருடப்பட்டு விட்டாலும், 6 digit PIN பயன்படுத்தி WhatsApp கணக்கை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாம் என்று அவர் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து, உங்களுக்கு தெரியாத நபரிடமிருந்து மெசேஜ்கள் வருவது, தங்களின் தனிப்பட்ட தகவல்களை திருட முயற்சிப்பது போன்றவை பற்றி நிறுவனத்திடம் புகார் அளிக்கலாம் என்பது போன்ற அம்சங்கள் உள்ளன. மேலும் பயனர்கள் பயனர்கள் ஆன்லைனில் இருப்பதை யார் யாரெல்லாம் பார்க்கலாம் என்பதை கட்டுப்படுத்த முடியும் எனவும் அவர் கூறினார்.

மேலும் இதே போன்று WhatsApp Group-ல் சத்தமில்லாமல் வெளியேறுவது மற்றும் Admin மட்டுமே புதிய நபர்களை சேர்ப்பது உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களும் கொண்டு வரப்பட்டுள்ளது. WhatsApp சேவை விதிமுறைகளை மீறிய 46 லட்சம் இந்திய கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளதாக அறிவித்தார்.