கொரோனா பரிசோதனைக்கான முதலாவது நடமாடும் ஆய்வகம் அறிமுகம்

கொரோனா சோதனைக்கான முதலாவது நடமாடும் ஆய்வகத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.

இந்த நடமாடும் ஆய்வகங்கள் நாட்டின் உள்பிரதேசங்களிலும், எளிதில்அணுக முடியாத பகுதிகளிலும் பயன்படுத்தப்படும் என சுகாதார அமைச்சர் ஹர்ஷ வர்தன் தெரிவித்துள்ளார்.

இந்த நடமாடும் ஆய்வகங்களில் தினசரி 25 RT-PCR சோதனைகளையும், 300 எலிசா சோதனைகளயும் நடத்த முடியும் என்ற அவர், காசநோய், எய்ட்ஸ் போன்ற சோதனைகளும் மத்திய அரசின் சலுகை கட்டணத்தில் நடத்த வசதி உள்ளதாக கூறியுள்ளார்.

நாட்டில் கொரோனா பரவத் துவங்கிய போது அதற்காக ஒரே ஒர் ஆய்வகம் மட்டுமே இருந்த தை சுட்டிக்காட்டியுள்ள அவர், தற்போது 953 ஆய்வகங்களில் கொரோனா சோதனைகள் நடப்பதாக தெரிவித்தார்.