நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் 18ம் தேதி முதல் 22ம் தேதி வரை நடத்த முடிவு

புதுடில்லி: மத்திய அரசு முடிவு... நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரை செப்டம்பர் 18 ஆம் தேதி முதல் 22ம் தேதி வரை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி சமூகவலைளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், நாடாளுமன்றத்தில் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடத்த வேண்டுகோள் விடுத்துள்ளார். இரு அவைகளிலும் மொத்தம் 5 அமர்வுகளாக கூட்டங்கள் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், பழைய நாடாளுமன்றம் மற்றும் புதிய நாடாளுமன்ற கட்டடம் இரண்டும் தெரியும் வகையிலான புகைப்படம் ஒன்றையும் ஜோஷி பதிவிட்டுள்ளார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் நிறைவடைந்தது. வழக்கமாக குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் கடைசி வாரத்தில் தான் தொடங்கும்.

விரைவில் நடைபெற உள்ள 5 மாநில சட்டமன்ற தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வரும் நிலையில், சிறப்புக் கூட்டத் தொடரை கூட்ட மத்திய அரசு முடிவு செய்திருப்பது அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.