நிலநடுக்கம் மீட்பு பணியில் இருந்து 2 நாடுகள் விலகியதாக தகவல்

துருக்கி: 2 நாடுகள் விலகின... துருக்கி மற்றும் சிரியாவில் அண்மையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்தை கடந்துள்ளது.

இவர்களில் துருக்கியில்ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி இறப்பு எண்ணிக்கை 24,617 ஆகவும் சிரியாவில் இறப்பு எண்ணிக்கை 3,500 ஐயும் தாண்டியுள்ளது. கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட பாரிய நில அதிர்வை தொடர்ந்து தெற்கு துருக்கியில் முன்னெடுக்கப்பட்ட வரும் மீட்பு நடவடிக்கைகளின் போது மோதல் ஏற்பட்டுள்ளது.

மீட்பு நடவடிக்கைகள் தொடர்கின்ற போதிலும் பலர் காப்பாற்றப்படுவார்கள் என்ற நம்பிக்கை குறைந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. ஜெர்மன் மீட்பு பணியாளர்களும் ஆஸ்திரிய இராணுவமும் நேற்று தேடுதல் நடவடிக்கைகளை இடைநிறுத்தி சில தரப்பினருடன் மோதலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை துருக்கியில் உணவு விநியோகம் குறைவடைந்து வருவதால் பாதுகாப்பு நிலைமை மோசமடைந்துள்ளது. அங்கு கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ள அதேவேளை பல துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

சட்டத்தை மீறும் எவரையும் தண்டிப்பதற்காக அவசரகால விதிகளை பயன்படுத்துவதற்கு தாம் தயாராக உள்ளதாக துருக்கியின் ஜனாதிபதி ரசெப் தையிப் எர்டோகன் தெரிவித்துள்ளார்.