அண்ணாமலை இன்று டெல்லிக்கு பயணம் மேற்கொள்ளவிருப்பதாக தகவல்

சென்னை: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஊழலுக்கு எதிராக 'என் மண் , என் மக்கள்' என்ற நடைபயணத்தை கடந்த 28 - ம் தேதி தொடங்கினார். இந்த யாத்திரையை ராமேஸ்வரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கிவைத்தார்.

இதையடுத்து நடைபயணத்தில் விடியல...முடியல எனும் வாசகத்துடன் கூடிய 'மக்கள் புகார் பெட்டி' இடம்பெற்று உள்ளது. ஊழல், சட்டம் ஒழுங்கு , கள்ளச்சாராயம், கட்டப் பஞ்சாயத்து, வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாதது உள்ளிட்ட புகார்களை பொதுமக்கள் அந்த பெட்டியினுள் வழங்கினால் அது தொடர்பாக நடவடிக்கை எடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ராமநாதபுரத்தில் யாத்திரையை தொடங்கிய அண்ணாமலை, பரமக்குடி, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, அறந்தாங்கி, திருப்பத்தூர், மேலூர், மதுரை ஆகிய நகரங்களில் தொடர்ந்துவருகிறது.

இந் த நிலையில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று டெல்லிக்கு திடீர் பயணம் மேற்கொள்ளவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா அழைப்பின் பேரில் அண்ணாமலை டெல்லிக்கு அவசர பயணம் செல்வதாக கூறப்படுகிறது.