டெல்லி விவசாயிகள் போராட்டத்தை நிறுத்த இந்திய ராணுவம் களமிறங்குவதாக வைரலாகும் தகவல்

டெல்லியில் தீவிரமாகும் விவசாயிகள் போராட்டத்தை நிறுத்த ராணுவ படை களமிறங்கி இருப்பதாக கூறும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வைரல் வீடியோவில் ராணுவத்தினர் வாகனங்களில் வந்து இறங்கும் காட்சிகள் இடம்பெற்று இருக்கின்றன. இந்த வீடியோ, தற்போதைய விவசாயிகள் போராட்டத்திற்காக ராணுவத்தினர் டெல்லிக்கு வரவழைக்கப்பட்டு உள்ளனர்.

அவர்களது வாகனங்கள் சுமார் 1.5 கிலோமீட்டர் தொலைவுக்கு வரிசை கட்டி நிற்கின்றன எனும் தலைப்பில் பகிரப்படுகிறது. வீடியோ மியூட் செய்யப்பட்ட நிலையில், இதேபோன்ற தலைப்புகளில் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

இருப்பினும், வீடியோ வேகமாக வைரலானதை தொடர்ந்து இந்திய ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் வீடியோ பற்றிய உண்மை விவரங்களை வெளியிட்டுள்ளார். அதன்படி டெல்லி விவசாயிகள் போராட்டத்தை நிறுத்த ராணுவம் குவிக்கப்படவில்லை.

வைரலாகும் வீடியோ தவறான தகவல்களுடன் பகிரப்பட்டு வருகிறது என இந்திய ராணுவத்திற்கான செய்தி தொடர்பாளர் கலோனல் அமன் ஆனந்த் தெரிவித்து இருக்கிறார். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன. போலி செய்திகளை பரப்பாதீர்கள்.