வரும் 2024 ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வுகள் மே மாதம் நடத்தப்படலாம் என தகவல்

இந்தியா: தேசிய தேர்வு முகமை NTA ஆனது நாட்டின் உயர் கல்விக்கான தேர்வுகளையும் நடத்தி கொண்டு வருகிறது. தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு,( நீட் ) ,பொது பல்கலைக்கழக நுழைவு தேர்வு (CUET ) மற்றும் கூட்டு நுழைவு தேர்வு (JEE ) போன்ற தேர்வுகளையும் நடத்தி கொண்டு வருகிறது. B,TECH, NEET, UG போன்ற கல்விக்கான 12 -ம் வகுப்பு முடித்த மாணவர்கள் இந்நுழைவு தேர்வுகளை மிகவும் ஆர்வமுடன் எதிர்பார்த்து இருக்கின்றனர்.

இதையடுத்து நடப்பு கல்வியாண்டுக்கான JEE, நீட், CUET தேர்வுகளுக்கான அட்டவணையானது 2022 டிசம்பர் 16 அன்று தேசிய தேர்வு முகமையின் மூலம் வெளியிடப்பட்டது. இதே போன்று அடுத்த கல்வி ஆண்டுக்கான தேர்வு அட்டவணை ஆனது தற்காலிகமாக தற்போது தெரிவிக்கப்பட்டு உள்ளது.

எனவே அதன்படி CUET தேர்வானது 2024 பிப்ரவரியில் பதிவு தொடங்கி மே கடைசி வாரத்தில் நடைபெறலாம். நீட் யூஜி மார்ச் முதல் வாரத்தில் பதிவு தொடங்கி மே 2-வது வாரத்தில் தேர்வுகள் நடைபெறலாம். JEE முதன்மை தேர்வானது பிப்ரவரி 3-வது வாரத்தில் பதிவு தொடங்கி ஏப்ரல் முதல் வாரம் தேர்வுகள் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே இதனை அடிப்படையாக வைத்து தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் தயாராக தொடங்கலாம். தேர்வுக்கான அட்மிட் கார்டு, தேர்வு தேதி மற்றும் தேர்வு மையம் மற்றும் வழிமுறைகள் யாவும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும்.