தமிழகத்தில் விலைவாசி உயர்வை தொடர்ந்து முட்டை விலை உயரும் என தகவல்

சென்னை: தமிழகத்தில் தக்காளி உள்ளிட்ட காய்கறி மற்றும் மளிகை பொருள்களின் விலையும் உயர்ந்து இருக்கிறது. இந்நிலையில் முட்டை விலையும் அதிகரித்துள்ளது. நாமக்கல் மண்டலம் தேசிய அளவில் கோழி முட்டை உற்பத்தி செய்து கொண்டு வருகிறது. இந்த மாவட்டம் முட்டை உற்பத்தியில் 2வது இடத்தில் இருக்கிறது. நாமக்கல்லில் இருந்து தினமும் 3.50 கோடி முட்டை உற்பத்தி செய்யப்படுகிறது.

இதையடுத்து இந்த முட்டைகள் தமிழகம், கேரளா மாநிலங்களுக்கும் ஓமன், கத்தார், பஹ்ரைன், மாலத்தீவு, இலங்கை போன்ற வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 2 மாதங்களாக NECC (National Egg Coordination Committee) நிர்ணயித்த விலைக்கு கோழிப்பண்ணையாளர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு முட்டை விற்பனை செய்யபட்டு வருகிறது.

ஆனால் ஒரு சில வியாபாரிகள் மைனஸ் விலைக்கு முட்டை கொள்முதல் செய்து இந்நடைமுறையை சீர்குலைத்து விட்டனர். அதனால் NECC விலைக்கு ஏற்ப பண்ணையாளர்கள் முட்டை விலையை விற்பனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

இதையடுத்து இது குறித்து மண்டல அளவில் அமைக்கப்பட்டுள்ள 60 பேர் கொண்ட பண்ணையாளர்கள் குழு கண்காணிப்பில் ஈடுபடுபட்டு உள்ளனர். இந்த விதிமுறைகளை மீறும் வியாபாரிகள் குறித்து புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இனி வரும் காலங்களில் முட்டை நுகர்வு உயர்ந்து ஏற்றுமதி வழக்கமாக இருக்கும் என்பதால் முட்டை விலை அதிகரிக்கும் என முட்டை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.