மாண்டாஸ் புயல் ... பேருந்து சேவைகள் ரத்து

சென்னை: வங்கக் கடலில் உருவாகிய மாண்டால் புயல் தற்போது தீவிரமடைந்துள்ளது. இந்தப் புயல் இன்று நள்ளிரவு அல்லது நாளை காலை புதுச்சேரி மற்றும் ஸ்ரீ ஹரிகோட்டாவிற்கு இடையில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதனால் இன்று இரவு சுமார் 75 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசும் மேலும் அத்துடன் கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

எனவே இதனை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலோர மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து நேற்று இரவு சென்னை, திருவள்ளூர் கடலூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் பேருந்து சேவைகளும் ரத்து செய்யப்பட்டது.

இதனை அடுத்து அதன் தொடர்ச்சியாக இன்றும் சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இரவு நேரங்களில் அரசு பேருந்துகள் இயங்காது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் பொது மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.