கர்நாடகா மாநிலத்திற்கு மே 10ம் தேதி பொது விடுமுறை

கர்நாடகா : கர்நாடகா மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் மே 10-ம் தேதி நடக்கவுள்ளது. மாநிலத்தில் மொத்தம் உள்ள 224 தொகுதிகளுக்கும் ஒரே நேரத்தில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

இதனை அடுத்து மொத்தம் 58,000க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடக்க உள்ளது. மே 10-ம் தேதி வாக்குப்பதிவு நடந்த பின், 13-ம் தேதி அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

தேர்தல் மேற்பாடு பணிகள் காரணமாக தேர்தலுக்கு முந்தைய நாள் அனைத்து வாக்குச்சாவடிகளில் தீவிர பணிகள் நடைபெறள்ளது.

இந்த நிலையில், மாநிலத்தில் உள்ள அனைவரும் வாக்களிக்க ஏதுவாக மே 10-ம், தேதியான புதன்கிழமை அன்று அனைவருக்கும் பொது விடுமுறை அளிக்க மாநில தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

எனவே அதன்படி அனைத்து மத்திய மற்றும் மாநில அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், பல்வேறு அமைப்புகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் (உதவி பெறும் மற்றும் உதவிபெறாத கல்வி நிறுவனங்கள் உட்பட) அனைவருக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.