இந்த தேதிகளில் மெட்ரோ ரயில் சேவை கால நேரம் நீட்டிப்பு

சென்னை: தமிழகத்தில் பொங்கல் பண்டிகை வருகிற 15-ம் தேதி அன்று கொண்டாடப்பட உள்ளதால் பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். இதனால் பொது போக்குவரத்துகளில் பயணிகளின் கூட்டம் மிகவும் அலைமோதும் என்பதால் ஜனவரி 12, 13, 14 ஆகிய 3 நாட்களுக்கு 16,932 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது.

இதையடுத்து அதிலும் குறிப்பாக சென்னை மாநகராட்சியில் இருக்கும் 6 பேருந்து நிலையங்களில் 340 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அத்துடன் பொங்கல் பண்டிகைக்கு தொடர் விடுமுறை அளிக்கப்படுவதால் பயணிகளின் கூட்டம் மெட்ரோ ரயிலிலும் அதிகமாக இருக்கும்.

அதனால் பயணிகளின் நலன் கருதி மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில், பொங்கல் பண்டிகைக்கு அளிக்கப்பட்ட தொடர் விடுமுறை காரணமாக பயணிகளுக்கிடையே கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக வருகிற 13,14-ம் தேதிகளில் மெட்ரோ ரயிலின் சேவை மாலை 5 மணி முதல் 8 மணி வரையிலான நேரத்தில் 5 நிமிட இடைவெளியுடன் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதே போன்று அனைத்து நிலையங்களில் கடைசி ரயில் சேவை இரவு 12 மணி வரையும், அத்துடன் 18ம் தேதி அன்று அதிகாலை 4 மணிக்கு ரயில் சேவை தொடங்கப்படும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.