ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதல்: சாலையில் விழுந்த சிறு பகுதி

உக்ரைன்: உக்ரைன் தலைநகர் கீவில் ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 2 குழந்தைகள் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். மேலும் ரஷ்ய ஏவுகணையில் ஒரு பகுதி சாலையில் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கீவின் கிழக்கு புறகரில் உள்ள டெஸ்னியான்ஸ்கி மற்றும் டினிப்ரோவ்ஸ்கியில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் மேலும் 14 பேர் காயமடைந்திருப்பதாக கீவ் நகர அதிகாரிகள் தெரிவித்தனர்.

தாக்குதலில் மருத்துமனை மற்றும் அதற்கு அருகில் உள்ள அடுக்குமாடி கட்டடங்கள் சேதமடைந்தது. கீவில் கடந்த ஒரு மாதத்தில் 18 முறையாக நடத்தப்படும் ரஷ்ய தாக்குதல் இது என்று உக்ரைன் கூறியுள்ளது.

ரஷ்ய ஏவுகணையில் இருந்து உடைந்த சிறு பகுதி ஒன்று, உக்ரைன் தலைநகர் கீவ்வில், சாலையில் சென்று கொண்டிருந்த காருக்கு அருகே விழுந்ததால் மக்கள் அச்சமடைந்தனர்.

நெடுஞ்சாலையில் வாகனங்கள் சென்றுக் கொண்டிருந்த போது, திடீரென பறந்து வந்த ஏவுகணையின் துண்டு, வெள்ளை நிற காருக்கு அருகில் விழுந்து நொறுங்கியது.

ரஷ்ய ஏவுகணை இலக்கை நெருங்குவதற்கு முன்னதாகவே இடைமறித்து அழித்துவிட்டதாகவும் அதன் மிச்சங்களே சாலையில் விழுந்ததாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது.