பத்தாம் வகுப்பு தேர்வில் தாயும், மகனும் ஒரே நேரத்தில் தேர்ச்சி

பத்தாம் வகுப்பு தேர்வில் தாயும் மகனும் ஒரே நேரத்தில் வெற்றி பெற்று அசத்தியுள்ளனர். இது மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் நடந்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டம் பாரமதியை சேர்ந்தவர் பிரதீப் ( 39). இவரது மனைவி பேபி குரோவ் ( 36). இவர்களின் மகன் சதானந்த். கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொது தேர்வை எழுதினார். படிப்பின் மீது தீராத ஆர்வம் கொண்டு இருந்த பேபி இம்முறை பத்தாம் வகுப்பு தேர்வுக்கு விண்ணப்பித்து எழுதி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த தேர்வு முடிவுகள் கடந்த 29 ஆம் தேதி வெளியானது. இதில் பேபி 64 . 40 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்தார். இவன் சதானந்த் 73 சதவீத மதிப்பெண்கள் பெற்றுள்ளார்

தாயும் மகனும் ஒரே நேரத்தில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற சம்பவம் அப்பகுதியில் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து அந்தப் பகுதியில் வசிப்பவர்கள் நேரடியாக பேபி வீட்டுக்கு வந்து இருவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து செல்கின்றனர்.

இதுகுறித்து பேபி கூறும் போது, எனக்கு படிப்பதற்கு மிகவும் விருப்பம். திரு வயதிலேயே எனக்கு திருமணம் செய்து வைத்து விட்டனர். எனது விருப்பத்தை கணவரிடம் தெரிவித்தேன். அவரும் என்னை ஊக்குவித்து தேர்வு எழுத விண்ணப்பித்தார். இரவு நேரங்களில் படித்துத் தேர்ச்சி பெற்றுள்ளேன். தொடர்ந்து படிக்க விரும்புகிறேன். தேர்வு நேரங்களில் நான் படிப்பதற்கு எனது கணவர் உறுதுணையாக இருந்தார். இவ்வாறு பேபி தெரிவித்துள்ளார்