லூசியானாவில் பனிப்பொழிவால் அடுத்தடுத்து வாகனங்கள் மோதிக் கொண்டு விபத்து

லூசியானா: பனிப்பொழிவால் வாகனங்கள் மோதிக் கொண்டு விபத்து... அமெரிக்காவின் லூசியானா நகரில் கடும் பனிப்பொழிவு காரணமாக 150க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்தனர்.

25 பேர் காயமடைந்தனர். லூசியானாவில் பனிமூட்டம் நிலவிவரும் நிலையில், காட்டுத்தீயால் ஏற்பட்ட புகையும் சேர்ந்துகொண்டதால் அங்குள்ள ஆற்றுப்பாலத்தில் 10 அடிக்கு அப்பால் உள்ள வாகனங்கள் தெரியாத நிலை ஏற்பட்டது.

அந்த பாலத்தில் சென்ற 158 கார்கள் ஒன்றோடொன்று மோதி சங்கிலித்தொடர் விபத்து ஏற்பட்டது.

எளிதில் தீப்பற்றக்கூடிய ரசாயனங்களை ஏற்றி சென்ற டேங்கர் லாரி கார் குவியல்களுக்கு மத்தியில் இருந்து உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டு பாலம் மூடப்பட்டது.