ஜீவ சமாதி அடைய அனுமதி கேட்டு முருகன் மனுதாக்கல்

ஜீவசமாதி அடைய அனுமதி கோரி மனு... முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன் வேலூர் சிறையில் ஜீவசமாதி அடைவதற்கு அனுமதி கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முருகன் வேலூர் ஆண்கள் சிறையிலும், அவரது மனைவி நளினி பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சிறையில் ஜீவசமாதி அடைவதற்கு அனுமதிக்க கோரி முருகன் கடந்த முதலாம் திகதி முதல் சிறையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. தொடர்ந்து 7 ஆவது நாளாக நேற்றும் அவர் உண்ணாவிரதத்தை மேற்கொண்டிருந்தார்.

முருகன் தனது மனைவி நளினி மற்றும் வெளிநாட்டில் உள்ள உறவினர்களுடன் வாட்ஸ் - அப்' மூலம் பேசுவதற்கு அனுமதி கேட்டு சென்னை நீதிமன்றில் வழக்கு நடந்து வருகிறது. அவ்வாறு உறவினர்களுடன் பேச அனுமதி மறுக்கப்படுவதால் மனமுடைந்த அவர் உண்ணாவிரதம் மேற்கொள்வதாகவும், சிறை வளாகத்திலேயே ஜீவசமாதி அடைய அனுமதி கேட்டு சிறைத்துறை நிர்வாகத்திடம் மனு அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

தினமும் அவர் குறிப்பிட்ட நேரத்தில் பழங்களை மட்டும் உட்கொள்கிறார் எனவும் சிறைத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.