NEET SS தேர்விற்கான முடிவுகள் இந்த தேதி வெளியாகும்

சென்னை: NEET SS தேர்விற்கான முடிவு அக்.15 வெளியீடு ... நீட் சூப்பர் ஸ்பெஷாலிட்டி (NEET SS) நுழைவுத்தேர்வு கடந்த செப்டம்பர் 29 மற்றும் 30 -ம் தேதிகளில் நடைபெற்ற நிலையில் தேர்வு முடிவு வருகிற அக்டோபர் 15 -ம் தேதி வெளியாகலாம் என தேசிய தேர்வு வாரியம் (NBE) அறிவித்துள்ளது.

அடுத்தாக மெரிட் பட்டியல் அல்லது ஸ்கோர் கார்டை nbe.edu.in, natboard.edu.in என்கிற பக்கத்தின் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளும்படி அறிவிக்கப்பட்டு உள்ளது.

தற்போது எப்படி ஆன்லைன் மூலமாக மெரிட் பட்டியல் அல்லது ஸ்கோர் கார்டை பதிவிறக்கம் செய்வது என்பதை பார்க்கலாம். இதையடுத்து முதலில், NBEன் nbe.edu.in அல்லது natboard.edu.in ஆகிய அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்கு சென்று NEET SS என்பதை கிளிக் செய்யவும்.

அதன் பின்னர், ஒவ்வொரு மாணவர்களின் சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்புக்கான முடிவு PDF ஐ தேர்வு செய்யவும். பின்னர், அப்பட்டியலின் கீழே சென்று PDF ல் உள்ள மதிப்பெண்கள் மற்றும் தரவரிசையை சரிபார்த்துவிட்டு தேவைப்படின் அந்த pdf ஐ டவுன்லோட் செய்து கொள்ளலாம்.