வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை... மீண்டும் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலை மேலும் வலுவடைந்துள்ளது. இதன் காரணமாக தமிழக கடல் பகுதிகளில் பலத்த சூறைக் காற்று வீசக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது:- தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும்.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறுவதற்கான சாத்தியக்கூறுகள் வலுவாக உள்ளன என சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.