வருகிற 4-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தமிழகம் முழுவதும் 1 லட்சம் மையங்களில் மெகா பூஸ்டர் தடுப்பூசி சிறப்பு முகாம்கள்

சென்னை: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரையில் மாதம் ஒரு மெகா சிறப்பு முகாம் என்ற அடிப்படையில் தமிழகம் முழுவதும் நடந்தன. இந்த மாதம் முதல் வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்த திட்டமிட்டுள்ளது.

இதைஅடுத்து பூஸ்டர் தடுப்பூசி 75 நாட்களுக்கு மட்டும் இலவசமாக போடும் பணி கடந்த மாதம் தொடங்கப்பட்டது. இந்த மாதத்துடன் பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி நிறைவடைகிறது. எனவே அதனால் அதனை வேகப்படுத்தும் வகையில் வாரந்தோறும் தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது.

இதனை தொடர்ந்து வருகிற 4-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தமிழகம் முழுவதும் 1 லட்சம் மையங்களில் முகாம் நடத்த சுகாதாரத்துறை ஏற்பாடு செய்து உள்ளது. பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக போடும் வாய்ப்பு வழங்கப்பட்டு இருப்பதை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. முதல் மற்றும் 2-ம் தவணை தடுப்பூசி போட்டவர்கள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொள்ள தகுதி உள்ளவர்கள்.

முதல் மற்றும் 2-ம் தவணை செலுத்திவிட்டு பூஸ்டர் தடுப்பூசி போடாமல் இருப்பவர்கள் அதிகமாக இருப்பது கவலை அளிப்பதாக சுகாதாரத்துறையினர் தெரிவிக்கின்றனர். இதுவரையில் போடாதவர்களும், 2 தவணை தடுப்பூசி செலுத்தியவர்களும் தங்கள் பகுதியில் உள்ள முகாம்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.