தீவிரவாத தடுப்பு வழக்கில் கேரளா, கர்நாடகாவில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை

கேரளா: கேரளா மற்றும் கர்நாடகாவில் பிஎப்ஐ., அமைப்புடன் தொடர்புடைய நபர்களின் வீடுகளில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தீவிரவாத தடுப்பு வழக்கில் இந்த சோதனைகள் நடந்துள்ளது என்று தெரிய வந்துள்ளது.

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் 3 இடங்களிலும், கர்நாடக மாநிலம் கலபுருகியிலும் தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியாவுக்குத் தொடர்புடைய தீவிரவாதத் தடுப்பு வழக்கில் இந்த சோதனைகள் நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்பட இந்தியாவின் பல்வேறு இடங்களில் தீவிரவாத செயல்களுக்காக பிஎப்ஐ இயக்கம் நிதித் திரட்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தீவிரவாதிகளுக்குப் பயிற்சியளிக்க முகாம் நடத்தி வந்ததாகவும் சிலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த சோதனையின் போது ஏராளமான டிஜிட்டல் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.