இனி கரண்ட் கட் பிரச்சனை இருக்காதாம்

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி கொண்டு வருகிறது. அதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் பல நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தே பணிபுரிய அறிவுறுத்தி கொண்டு வருகின்றனர்.

இதையடுத்து மக்கள் மழை காரணமாக வீடுகளில் முடங்கி இருப்பதால் மின்சார பயன்பாடு அதிகரிக்கும் என்ற அச்சம் எழுந்து உள்ளது. இருந்தாலும் ஏசி உள்ளிட்ட குளிர்சாதன உபகாரணங்கள் தேவைப்படாது. மேலும் பண்டிகை காலம் என்பதால் பல்வேறு நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது.


அதனால் மின் தேவை அதிகமாக தேவைப்படாது. இந்த நிலையில், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கீழ் செயல்படும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (Tangedco) திறம்பட சமாளித்து வருவதாக தகவல்கள் கிடைத்து உள்ளன.

தமிழகத்தில் ஒட்டுமொத்த மின் தேவை சராசரியாக 14,000 மெகாவாட் ஆக இருந்த நிலையில், தற்போது 10,000 மெகாவாட் ஆக குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை காலமும், அடுத்தடுத்த விடுமுறை நாட்களும் மின் தேவையை பெரிதும் குறைத்து உள்ளன. அதனால் வெயில் காலத்தில் தடையற்ற மின்சாரம் வழங்குவதில் தமிழக அரசுக்கு எந்தவித சிக்கலும் வராது என எதிர்பார்க்கப்படுகிறது.