Whatsappல் தற்போது ஒரு புதிய அப்டேட் அறிமுகம்

இந்தியா: வாட்ஸ்ஆப் செயலியானது நல்ல ஒரு தகவல் பரிமாற்றம் செய்யும் செயலியாக மக்கள் மத்தியில் இருக்கிறது. இதில் முன்னதாக சாட்டிங் மட்டும் இருந்த நிலையில் தற்போது வீடியோ கால் செய்யும் வசதியும்,

பணம் அனுப்பும் வசதியும், வாய்ஸ் மெசேஜ் அனுப்பும் வசதி என்று பயனர்களின் தேவைக்கு ஏற்ப பல அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. மேலும் அது மட்டுமில்லாமல் ஒவ்வொரு மாதமும் புது புது அப்டேட் வருவதால் மக்களுக்கு எல்லா வசதிகளும் ஒரே செயலியில் வந்து விடுகிறது.

இந்த நிலையில் வாட்ஸ்ஆப் தற்போது புது அப்டேட் ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதாவது இனி வாட்ஸ் ஆப் செயலியில் வீடியோ வடிவில் செய்தியை அனுப்பும் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

இதனை அடுத்து இது குறித்த சோதனை முயற்சிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும், விரைவில் மக்களுக்கு இந்த அப்டேட் வழங்கப்படும் என தகவல் வெளியாகியிருக்கிறது.