2 மணிநேரம் மட்டுமே வெடி வெடிக்க அனுமதியாம்

புதுச்சேரி : தமிழகம் உட்பட நாடு முழுவதும் அக்டோபர் 24ஆம் தேதி தீபாவாளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதற்காக வெடி வெடிக்கும் நேரம் பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தீபாவளியன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்படும் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.

மேலும், அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிப்பதையும், பட்டாசு வெடிப்பதையும் பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என புதுச்சேரி அரசு அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் தீபாவளியன்று பட்டாசு வெடிக்கும் நேரம் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது புதுச்சேரியிலும் பட்டாசு வெடிக்கும் நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளியன்று காலை 6-7 மணி முதல் இரவு 7-8 மணி வரை மட்டுமே அதிக ஒலி வெடிக்கும் பட்டாசுகளை உற்பத்தி செய்யவும், விற்பனை செய்யவும், பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டு, பட்டாசு வெடிக்க புதுச்சேரி ஆட்சியர் வல்லவன் உத்தரவிட்டுள்ளார்.