முகக்கவசம் அணிந்திருந்தால் மட்டுமே அனுமதி; தனியார் தொலைபேசி நிறுவனம் நடவடிக்கை

முகக்கவசம் அணிந்திருந்தால் மட்டுமே அனுமதி... வவுனியாவிலுள்ள பிரபல தனியார் தொலைபேசி வாடிக்கையாளர்கள் சேவை நிலையத்திற்கு செல்லும் பொதுமக்களின் நலன் கருதி முகக்கவசம் அணிந்து வந்து சேவைகளைப் பெற்றுக்கொள்ளச் செல்பவர்கள் மட்டும் உள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

முககவசம் அணியாமல் தமது சேவைகளைப் பெற்றுக்கொள்ளச் செல்லும் பொதுமக்களை திருப்பி அனுப்பி வருகின்றதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர் . நாட்டில் எற்பட்டுள்ள கொரோனா தொற்றுக் காரணமாக நாடு முழுமையாக இயல்பு நிலைக்கு செல்லவில்லை. இந்நிலையில் பாதுகாப்பு நடைமுறை சட்டங்களை அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் வவுனியாவிலுள்ள பல்வேறு அரச தனியார் வங்கிகள், அரச திணைக்களங்களில் முகக்கவசம் அணிந்து செல்லாது அரச மற்றும் தனியார் துறை ஊழியர்கள் கடமையாற்றி வருகின்றனர் .

இந்நிலையில் முகக்கவசம் அணியாமல் பொதுமக்களும் கொரோனா அச்சம் இன்றி தமது வழமையான செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். எனினும் வவுனியா நகரில் இரண்டாம் குறுக்கு தெருவிலுள்ள தனியார் தொலைபேசி வாடிக்கையாளர் சேவை நிலையத்திற்கு தமது சேவைகளைப் பெற்றுக்கொள்ள செல்லும் பல பொதுமக்கள் முக்கவசம் இன்றியே வருகை தருகின்றனர் .

இதனால் அங்கு பாதுகாப்பு கடமையிலுள்ள ஊழியர் முககவசம் அணிந்து சென்றால் மட்டுமே உள்ளே சென்று சேவைகளை பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்படுகின்றனர். முகக்கவசம் அணிந்து செல்லாதவர்களை திருப்பி அனுப்பும் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றது. இதனால் பல்வேறு கிராமங்களிலிருந்து தமது சேவைகளை பெற்றுக்கொள்ள செல்லும் பலர் முகக்கவசம் இன்றி செல்வதால் அவர்களை திருப்பி அனுப்புவதாகவும், இதனால் தமக்கு பலவேறு சிரமங்கள் ஏற்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.

எனினும் பொதுவான பொதுமக்கள் நடைமுறைச் சட்டம் ஒன்றினை பேணியே குறித்த தனியார் தொலைபேசி வாடிக்கையாளர் சேவை நிலையம் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடக்கக்கது.