இன்று வணிக பயன்பாட்டிற்காக கியாஸ் சிலிண்டர் விலை மட்டும் குறைந்தது

சென்னை: ஒவ்வொரு மாதமும் 1-ந்தேதி பொதுவாக எண்ணெய் நிறுவனங்களால் சமையல் கியாஸ் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன் படி இன்று வணிக பயன்பாட்டிற்காக கியாஸ் சிலிண்டர் விலை மட்டும் குறைக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து 19 கிலோ எடையுள்ள வர்த்தக பயன்பாட்டிற்கான சிலிண்டர் ரூ.96 அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் ரூ.2,141-க்கு விற்கப்பட்ட வணிக சிலிண்டர் தற்போது ரூ.2045 ஆக குறைந்துள்ளது. ஆகஸ்ட் மாதம் மிக குறைந்த அளவில் சிலிண்டர் விலை குறைந்தது.

ஆனால் செப்டம்பர் மாதத்தில் ரூ.96 குறைந்து இருப்பதால் ஓட்டல், டீக்கடை உள்ளிட்ட பல வியாபாரத்திற்கு பயன்படுத்தக் கூடிய வர்த்தக பிரமுகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த மாதங்களைவிட இந்த மாதம்தான் விலை குறைக்கப்பட்ட விகிதம் அதிகமாகும். சிறிய ஓட்டல்கள் முதல் பெரிய ஓட்டல்கள் வரை வர்த்தக பயன்பாட்டுக்கு சிலிண்டர் பயன்படுத்தப்படுகிறது. அதன் விலை குறைக்கப்பட்டதை வரவேற்றுள்ளனர்.

மேலும் வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை குறைக்கப்பட்ட போதிலும் வீட்டு சமையல் கியாஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் இல்லை. 14 கிலோ எடையுள்ள அந்த சிலிண்டர் விலை சென்னையில் ரூ.1068.50-க்கு விற்கப்படுகிறது.