காணொளி காட்சி வாயிலாக அடுக்குமாடி குடியிருப்புகள் திறப்பு

சென்னை: தமிழ்நாடு நகர் புற வாரியத்தின் சார்பாக 8 மாவட்டங்களில் 15 திட்டப் பகுதிகளில் 45.90 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 4,644 அடுக்குமாடி குடியிருப்புகளை காணொளி காட்சி மூலமாக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தமிழக அரசு செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

முதல்வர் ஸ்டாலின் தலைமை செயலகத்தில் தமிழ்நாடு நகர் புற வாரியத்தின் சார்பாக 8 மாவட்டங்களில் 15 திட்டப் பகுதிகளில் 45.90 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 4,644 அடுக்குமாடி குடியிருப்புகளை காணொளி காட்சி மூலமாக திறந்து வைத்துள்ளார்.

மேலும் 11,300 பயனாளிகளுக்கு தாமாக வீடு கட்டும் திட்டத்தின் கீழ், தலா ரூ.2.10 லட்சம் வீதம் ரூ.237.30 கோடி மதிப்பிலான பணி ஆணைகளையும், 4,500 பயனாளிகளுக்கு குடியிருப்புகளுக்கான ஒதுக்கீட்டு ஆணைகளையும், 350 பயனாளிகளுக்கு குடியிருப்பு மற்றும் மனைகளுக்கான கிரைய பத்திரங்களையும் வழங்கிடும் விதமாக 8 பயனாளிகளுக்கு பணி ஆணைகளை வழங்கியுள்ளார்.


1970 -ஆம் வருடம் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் தமிழகத்தில் வாழும் ஏழை குடும்பங்களுக்கு வீட்டு வசதி ஏற்படுத்தி தரும் விதமாக தமிழ்நாடு குடிசை பகுதி மாற்று வாரியம் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.