பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர் செல்லும் மக்களுக்கு உதவும் வகையில் சிறப்பு ரயில்கள் இயக்கம்

சென்னை:பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கம் .... தமிழகத்தில் ஆண்டுதோறும் ஜனவரி 15ம் தேதி பொங்கல் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாட்டப்படும். ந்த பண்டிகை ஜனவரி 14ம் தேதி போகியில் தொடங்கும் பிறகு ஜனவரி 17ம் தேதி காணும் பொங்கல் வரை பாரம்பரிய முறைகளால் மக்கள் பண்டிகையை கொண்டாடி மகிழ்வர்.

இதனை அடுத்து வரும் 2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் விடுமுறை பற்றிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. எனவே அதன்படி 2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகை ஜனவரி 15 ஞாயிற்றுக்கிழமை கொண்டப்படவுள்ளது.

இதையடுத்து ஜனவரி 14 போகி, ஜனவரி 15 பொங்கல், ஜனவரி 16 மாட்டு பொங்கல், ஜனவரி 17 காணும் பொங்கல் என தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை வரவுள்ளது. இந்த விடுமுறையை முன்னிட்டு வெளியூர்களில் தங்கி பணிபுரியும் மக்கள் தங்களின் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டு கொண்டு வருகின்றனர்.

இதனை கருத்தில் கொண்டு தென்னக ரயில்வே சென்னையில் இருந்து மக்கள் சொந்த ஊர் செல்ல ஏதுவாக சிறப்பு ரயில்களை இயக்கவுள்ளது. அதன்படி ஜனவரி 13 அன்று தாம்பரம் – நாகர்கோவில், ஜனவரி 12 தாம்பரம் – திருநெல்வேலி , ஜனவரி 17 கொச்சுவேலி – தாம்பரம், ஜனவரி 16 தாம்பரம் – நெல்லை போன்ற இடங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.