குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு ஓபிஎஸ் பிறந்தநாள் வாழ்த்து

சென்னை: இந்தியாவின் முதல் பழங்குடியின குடியரசுத் தலைவர் என புகழை பெற்றுள்ளவர் திரௌபதி முர்மு. நாட்டின் 2-வது பெண் குடியரசு தலைவர் என்ற அந்தஸ்தை கடந்தாண்டு இவர் பெற்றார். இந்தியாவின் 15 ஆவது குடியரசுத் தலைவராக பதவி ஏற்றுள்ள இவர் நிஜ பெயர் புடி. இவரது ஆசிரியரின் மூலமாக இவரது பெயர் திரௌபதி என மாற்றப்பட்டு உள்ளது .

1960களில் பாலச்சோர் மற்றும் கட்சோட் போன்ற பகுதிகளிலிருந்து வரும் ஆசிரியர்கள் பழங்குடியின மாணவர்களுக்கு கல்வி போதிப்பது வழக்கமாக இருந்த நிலையில் ஒடிசாவின் மையூர் பாஞ்சை சேராத வெளி மாவட்டத்தில் இருந்து வந்த ஆசிரியர் ஒருவர் திரௌபதி என இவருக்கு பெயரிட்டு உள்ளார்.

இதையடுத்து இவரது திருமணத்திற்கு பிறகாக இவரது பெயர் திரௌபதி முர்மு என்று மாறியுள்ளது. இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது,

மாண்புமிகு இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதிமுர்மு அவர்களின் 65-வது பிறந்தநாளை முன்னிட்டுஎனது அன்பான வாழ்த்துகளைத் தெரிவிக்க விரும்புகிறேன். மாண்புமிகு இந்தியக் குடியரசுத் தலைவருக்கு இன்னும் பல ஆண்டுகள் நல்ல ஆரோக்கியத்தையும், தேசத்திற்குச் சேவை செய்ய வலிமையையும் எல்லாம் வல்ல இறைவன் வழங்க பிரார்த்திக்கிறேன் என அவர் குறிப்பிட்டு உள்ளார்.