கேரளாவின் 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை

கேரளா: கடந்த வாரம் கேரளாவில் பெய்த கனமழையால் பல்வேறு ரயில்கள் ரத்து செய்யப்பட்டது. மேலும் திருவனந்தபுரம் உட்பட 8 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கையை விடுத்தது. அதனை தொடர்ந்து இன்று பெய்து வரும் கனமழை காரணமாக கேரளாவில் ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

அதை தொடர்ந்து பாலக்காடு மாவட்டத்தில் உள்ள அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.எனவே அதனால் பொதுமக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

இதையடுத்து தற்போது தொடர்ந்து மழை பெய்து வருவதால் பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலச்சரிவால் பொதுமக்கள் உயிரிழக்கும் சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மலைப்பகுதியில் வசிக்கும் மக்கள் வேறு இடங்களுக்கு செல்லவும், ஆற்றுப்பகுதிகளுக்கு யாரும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் தற்போது தயார் நிலையில் இருந்து வருகின்றனர். இந்த ஓணம் பண்டிகை காலத்தில் அதிக கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.